28.2 C
Jaffna
Thursday, July 2, 2020
Home News உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை!

உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை!

உலகமெங்கும் கொரோனா வைரஸ் தொற்றால் சிகிச்சை பலனின்றி அரை மில்லியன் மக்கள் மரணமடைந்துள்ள நிலையில்,மிக மோசமான நிலை இனிமேல் தான் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பல வியாபித்து ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில்,இதன் மிக மோசமான தாக்கம் இன்னும் வர இருப்பதாக தெரிவித்துள்ளார் உலக சுகாதார அமைப்பின் தலைவர்.

தற்போதைய சூழலில் அரசாங்கங்கள் சரியான கொள்கைகளை செயல்படுத்தத் தொடங்கவில்லை என்றால் இந்த வைரஸ் இன்னும் பலரை பாதிக்கும் என்றார் அவர்.

சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய இந்த பெருந்தொற்று உலகமெங்கும் பரவி,தற்போது 10 மில்லியன் மக்கள் இதன் பாதிப்புக்கு இலக்காகியுள்ளனர்.

சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் எண்ணிக்கையும் 500,000 கடந்துள்ளது.உலகின் பாதி அளவுக்கான கொரோனா பாதிப்புகள் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கண்டறியப்பட்டுள்ளன,ஆனால் கொரோனா பரவல் அமெரிக்காவில் வேகமெடுத்து வருகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பு தெற்காசியா மற்றும் ஆபிரிக்காவையும் உலுக்கி வருகிறது.கொரோனா வைரஸ் தாக்கம் முடிந்துவிட வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம்.

நாம் அனைவரும் நம் வாழ்க்கையை பழையபடி தொடர விரும்புகிறோம்.ஆனால் கடினமான உண்மை என்னவென்றால்,இது முடிவடைவதற்கான சூழல் தற்போது அருகில் இல்லை என்கிறார் உலக சுகாதார அமைப்பின் தலைவர்.

அமெரிக்கா,பிரேசில்,இந்தியா உள்ளிட்ட நாடுகள் தத்தளித்து வந்தாலும்,நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் உறுதியான நடவடிக்கைகளால் மீண்டுள்ளன என்றார்.

0 Reviews

Most Popular

கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத பாதுகாப்பான 14 நாடுகளை வெளியிட்டுள்ள ஐரோப்பிய யூனியன்!

கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத பாதுகாப்பான 14 நாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிப்பதாக,ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது. சீனாவில் முதன் முதலில் தென்பட்டதாக கூறப்படும் இந்த கொரோனா வைரஸ், அதன் பின் மார்ச்...

30 லட்சம் பாஸ்போர்ட் வழங்க பிரித்தானியா முடிவு!

ஹாங்காங்கை சேர்ந்தவர்களுக்கு 30 லட்சம் பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும்,இது தொடர்பான அறிவிப்பை வெளியுறவு அமைச்சர் டாமினிக் ராப் வெளியிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஹாங்காங் மீதான தன் கட்டுப்பாடுகளை தீவிரமாக்கும் வகையில்,சீனா...

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் விதிக்கப்பட்ட தடை!

பிரான்ஸ் தலைநகரில் இம்மாதத்தில் சில நாட்களுக்கு பட்டாசுகள் விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக பிரான்சில் விதிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டு வருகிறது. இந்நிலையில் தலைநகர் பாரிசில்,இம்மாதத்தின் சில நாட்களுக்கு பட்டாசுகள் விற்பனைக்கு...

ஜூலை மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்!

பொதுவாக மனிதராக பிறந்த அனைவருக்குமே நல்ல குணங்கள்,தீய குணங்கள் என்று இரண்டு குணங்கள் உண்டு. அந்தவகையில் தற்போது ஜூலை மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன என்று பார்க்கலாம். நிறைவான வாழ்வை...

Recent Comments