28.2 C
Jaffna
Thursday, July 2, 2020
Home News Europe பிரித்தானியாவில் திருமணத்தின்போது விதிக்கப்பட்டுள்ள புதிய விதிகள்!

பிரித்தானியாவில் திருமணத்தின்போது விதிக்கப்பட்டுள்ள புதிய விதிகள்!

ஆண்டொன்றிற்கு 250,000க்கும் அதிகமான திருமணங்கள் நடைபெறும் பிரித்தானியாவில் கொரோனாவால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் திருமணத்துக்கு காத்திருந்த ஜோடிகள் ரொம்பவே திணறிப்போனார்கள்.

தற்போது பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் திருமணங்கள் இனி நடத்தலாம் என அனுமதியளித்துள்ள நிலையிலும்,சில விதிகளைக் கடைப்பிடித்துதான் ஆகவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவைகளில் முக்கியமான சில விதிகள்,மணப்பெண்ணின் தந்தை தன் மகளை திருமணம் நடக்கும் ஆலயத்திற்குள் அழைத்துவரும்போது, மகளின் கையைப் பிடித்து அழைத்து வரக்கூடாது.

மோதிரம் மாற்றிக்கொண்டதும் மணமக்கள் கைகளைக் கழுவிக்கொள்ளவேண்டும். திருமணங்களில் 30 பேர் வரை கலந்துகொள்ளலாம்,ஆனால் வரவேற்பு நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது.

குடும்பங்களுக்குள் வேண்டுமானால் வரவேற்பு நிகழ்ச்சிகள் நடத்திக்கொள்ளலாம், ஆனால்,இரண்டு குடும்பத்தினர்,சாட்சிகள்,புகைப்படக் கலைஞர் முதலானவர்களுக்குமட்டுமே அனுமதி.

திருமண ஆராதனையின்போது,பாடல் பாடவோ,சத்தம் எழுப்பவோ கூடாது.

இசையும் வாசிக்கக்கூடாது,ஏனென்றால் இசை வாசிக்கும்போது பாதிரியார்,இந்த பெண்ணை உனக்கு மனைவியாக ஏற்றுக்கொள்ள சம்மதமா என்பதைக் கூட சத்தமாக கேட்கவேண்டியிருக்கும் என்பதால்தான் இந்த தடை.

மொத்தத்தில் திருமணம் நடத்த அனுமதியளிக்கப்பட்டாலும்,அதனால் எக்காரணம் கொண்டும் கொரோனா பரவிவிடக் கூடாது என்பதற்காகத்தான் இந்த விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

0 Reviews

Most Popular

கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத பாதுகாப்பான 14 நாடுகளை வெளியிட்டுள்ள ஐரோப்பிய யூனியன்!

கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத பாதுகாப்பான 14 நாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிப்பதாக,ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது. சீனாவில் முதன் முதலில் தென்பட்டதாக கூறப்படும் இந்த கொரோனா வைரஸ், அதன் பின் மார்ச்...

30 லட்சம் பாஸ்போர்ட் வழங்க பிரித்தானியா முடிவு!

ஹாங்காங்கை சேர்ந்தவர்களுக்கு 30 லட்சம் பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும்,இது தொடர்பான அறிவிப்பை வெளியுறவு அமைச்சர் டாமினிக் ராப் வெளியிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஹாங்காங் மீதான தன் கட்டுப்பாடுகளை தீவிரமாக்கும் வகையில்,சீனா...

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் விதிக்கப்பட்ட தடை!

பிரான்ஸ் தலைநகரில் இம்மாதத்தில் சில நாட்களுக்கு பட்டாசுகள் விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக பிரான்சில் விதிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டு வருகிறது. இந்நிலையில் தலைநகர் பாரிசில்,இம்மாதத்தின் சில நாட்களுக்கு பட்டாசுகள் விற்பனைக்கு...

ஜூலை மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்!

பொதுவாக மனிதராக பிறந்த அனைவருக்குமே நல்ல குணங்கள்,தீய குணங்கள் என்று இரண்டு குணங்கள் உண்டு. அந்தவகையில் தற்போது ஜூலை மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன என்று பார்க்கலாம். நிறைவான வாழ்வை...

Recent Comments