27.6 C
Jaffna
Wednesday, September 23, 2020
Home News சீனாவில் மிக வேகமாக பரவும் காய்ச்சல்!

சீனாவில் மிக வேகமாக பரவும் காய்ச்சல்!

சீனாவில் பன்றிகளிடையே பரவும் புதுவித காய்ச்சல் எந்த நேரத்திலும் மனிதர்களைத் தாக்கலாம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சீனா வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.கொரோனா வைரசால் 1 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.5 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர்.

சீனாவில் உருவான கொரோனா வைரசால் உலகம்திணறி வரும் நிலையில் கொரோனா வைரஸ் போல பெருந்தொற்றாக வாய்ப்புள்ள காய்ச்சல் ஒன்று சீனாவில் பன்றிகளிடையே தற்போது பரவி வருகிறது.

ஆனால்,எந்த நேரத்திலும் இது மனிதர்களைத் தாக்கலாம் என்ற ஆபத்து இருந்து வருகிறது.

இப்போது இது உடனடியான பிரச்சினை இல்லை என்றாலும், பின் வரும் காலங்களில் எப்போது வேண்டுமானாலும் இது மனிதர்களிடையே பரவும் வாய்ப்புண்டு.

இக்காய்ச்சல் கொரோனா வைரஸ் தொற்று போல உலகப் பெருந்தொற்றாக மாறும் அச்சுறுத்தல் உள்ளது என ஆய்வாளர்கள் கவலை கொண்டுள்ளனர்.

இது புதுவிதமான வைரஸ் என்பதால் மனிதர்களுக்கு இதனை எதிர்கொள்ள நோயெதிர்ப்புத் திறன் இருக்காது.இப்போது வரை இதனால் பேராபத்து ஏதும் இல்லை.

New swine flu strain with 'pandemic potential' found in Chinese ...

ஆனால்,இதனை நாம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்கிறார் இது குறித்து தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வரும் பேராசிரியர் கிம் சவு சாங்.இந்த வைரஸை ஜி4 இஏ எச்1என்1 என ஆராய்ச்சியாளர்கள் அழைக்கிறார்கள்.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments