28.5 C
Jaffna
Tuesday, September 22, 2020
Home News போப் பிரான்சிஸிடம் ஆலோசனை கேட்ட இளவரசர்!

போப் பிரான்சிஸிடம் ஆலோசனை கேட்ட இளவரசர்!

அபுதாபி பட்டத்து இளவரசருடன்,போப் பிரான்சிஸ் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.

அபுதாபி பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யானுடன் கத்தோலிக்க மதகுரு புனித போப் பிரான்சிஸ் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.

அப்போது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வாடிகன் ஆகிய நாடுகளுக்கு இடையிலான இரு தரப்பு உறவு குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

மேலும் கொரோனா பாதிப்பை தடுக்க உலக நாடுகள் மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.இந்த பணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் பற்றியும்,தடுப்பு பணியில் சர்வதேச ஒத்துழைப்பு குறித்தும் பேசப்பட்டது.

அபுதாபியில் கடந்த ஆண்டு மனித சகோதரத்துவ ஆவணம் குறித்த உடன்படிக்கை ஒன்று கையெழுத்திடப்பட்டது.அதன் அடிப்படையில் கொரோனா பாதிப்பில் இருந்து மனித உயிர்கள் பாதுகாக்கப்பட வேண்டிய முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தப்பட்டது.

அமீரக அரசு மேற்கொண்டு வரும் மனிதாபிமானப் பணிகள் குறித்து போப் பிரான்சிஸ் பாராட்டு தெரிவித்தார்.குறிப்பாக மிகவும் துயரமான இந்த கால கட்டத்தில் அமீரக அரசு பெருவியன் அமேசான் நதிப் பகுதிக்கு 40 டன்கள் எடை கொண்ட மருத்துவ உதவிப் பொருட்களை அத்தியாவசிய தேவையை கருத்தில் கொண்டு அனுப்பி வைத்தது.

அபுதாபி பட்டத்து இளவரசருடன், போப் பிரான்சிஸ் தொலைபேசியில் ஆலோசனைகொரோனா பாதிப்பு ஏற்பட்டது முதல் அமீரக அரசு இந்தியா,பாகிஸ்தான்,வங்காள தேசம்,இலங்கை உள்ளிட்ட 68 நாடுகளுக்கு ஆயிரம் டன்கள் எடை கொண்ட மருத்துவ உதவிப் பொருட்களை மனிதாபிமான அடிப்படையில் அனுப்பி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.இதன் மூலம் 9,63,000 சுகாதார பணியாளர்கள் பயன்பெறுவர் என தெரிவிக்கப்பட்டது.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments