28.2 C
Jaffna
Tuesday, September 8, 2020
Home Lifestyle Food சுவையான சிக்கன் பரோட்டா செய்முறை!

சுவையான சிக்கன் பரோட்டா செய்முறை!

தேவையான பொருட்கள்:

  • பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)
  • கொத்தமல்லி இலை – 1 ஒரு கைப்பிடி
  • வெங்காயம் – ஒன்று
  • மிளகு தூள் – 1 ஸ்பூன்
  • எலும்பு இல்லாத சிக்கன் – 1/2 கிலோ
  • மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
  • சீரகம்,மிளகாய் தூள் – 1/4 ஸ்பூன்
  • மல்லி தூள் – 1 ஸ்பூன்
  • இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
  • எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • மைதா – ஒரு கப்

செய்முறை:

  • முதலில் பரோட்டாவுக்கு மாவு பிசைந்து வைத்து கொள்ள வேண்டும்.ஒரு பவுலை எடுத்து கொள்ளுங்கள்.அவற்றில் ஒரு கப் மைதா மாவை சேர்க்க வேண்டும்.
  • பின்பு அவற்றில் தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும்.அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பிசைய வேண்டும்.
  • அதாவது சப்பாத்திக்கு மாவு பிசைவது போல் பிசைந்து பின்பு சிறிதளவு எண்ணெய் சேர்த்து மாவை நன்றாக பிசைந்து கொள்ளவும்.பின்பு ஒரு வெள்ளை துணியால் மாவை மூடி வைக்கவும்.
  • இப்பொழுது சிக்கன் பரோட்டா செய்வதற்கு பூரணம் எப்படி தயாரிப்பது என்று இவற்றில் நாம் காண்போம்.தொடர்ந்து கவனமா படித்து வரவும்.
  • முதலில் சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.பின்பு சிக்கனை அரை வேக்காட்டில் வேக வைத்து கொள்ளவும்.
  • அதாவது ஒரு வாணலியில் சிக்கனை போட்டு அவற்றில் சிறிதளவு எண்ணெய் மற்றும் 1/2 ஸ்பூன் மிளகு தூள் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.
  • சிக்கன் வெந்ததும் மிக்சியில் சேர்த்து அரைத்து வைத்து கொள்ளவும்.
  • பின்பு அதே வாணலியில் சிறிதளத்து எண்ணெய் சேர்த்து நன்கு பொடிதாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.
  • வெங்காயம் நன்கு வதங்கியதும் மேல் கூறப்பட்டுள்ள மசாலாப்பொருட்களான மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்,ஒரு டீஸ்பூன் சீரக தூள்,ஒரு டீஸ்பூன் மல்லி தூள்,ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது மற்றும் காரத்திற்க்காக ஒரு டீஸ்பூன் மிளகாய் தூள் ஆகிய மசாலா பொருட்களை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.
  • மசாலாவை பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கி கொள்ளவும்.பின்பு அரைத்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து வதக்கவும்.
  • பின்பு பொடிதாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலையை சேர்த்து நன்றாக வதக்கினால் சிக்கன் கீமா தயார்.
  • இப்போது சிக்கன் பரோட்டா எப்படி செய்வது என்று பார்ப்போம்.பிசைந்து வைத்துள்ள மைதா மாவை இப்போது எடுத்து கொள்ளவும்.மைதா மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.பின்பு சப்பாத்தி கட்டையில் மைதா மாவை தேய்த்து கொள்ளவும்.
  • பின்பு சிக்கன் கீமா ஆறியதும் ஒரு ஸ்பூன் எடுத்து கொண்டு அவற்றை தேய்த்து வைத்துள்ள மைதா மாவில் வைத்து மடிக்க வேண்டும்.
  • முக்கியமாக துளைகள் இல்லாமல் நன்றாக மடித்து கொண்டு திரும்பவும் சப்பாத்தி பலகையில் வைத்து சப்பாத்தி போல் தேய்த்து கொள்ளவும்.
  • இவ்வாறு மீதம் இருக்கும் மைதா மாவையும் இந்த முறையில் தேய்த்து வைத்து கொள்ளவும்.
  • தேய்த்து வைத்திருக்கும் மைதா மாவை தோசை கல்லில் போட்டு சப்பாத்தி போல் பிரட்டி எடுத்தால் சுவையான சிக்கன் பரோட்டா தயார்.அனைவருக்கும் அன்புடன் இந்த சிக்கன் பரோட்டாவை பரிமாறவும்.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments