28.4 C
Jaffna
Monday, September 21, 2020
Home News Asia பிரித்தானிய விசாவிற்கான விண்ணப்ப நிலையம் திறக்கும் திகதி வெளியானது!

பிரித்தானிய விசாவிற்கான விண்ணப்ப நிலையம் திறக்கும் திகதி வெளியானது!

கொழும்பில் அமைந்துள்ள பிரித்தானிய விசாவிற்கான விண்ணப்ப நிலையம் எதிர்வரும் 7ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக விண்ணப்பம் செய்தல் உள்ளிட்ட விபரங்களை http://vfsglobal.co.uk/lk என்ற இணையத்தளத்திற்கு சென்று பார்வையிட முடியும்.

அத்துடன் விசா விண்ணப்ப நிலையத்திற்கு சேவைக்காக வருவோர் முன் அனுமதி பெற்றுக்கொள்வது அவசியம் என்பதுடன்,அந்த தினத்தில் பிரித்தானிய விசா விண்ணப்ப நிலையமானது திறந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை முன் அனுமதி இன்றி வருபவர்கள் விசா விண்ணப்ப நிலையதிற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விசா விண்ணப்ப மையங்களுக்கு வருகை தரும் வாடிக்கையாளர்கள் சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு சமூக இடவெளியை பேணுவதுடன், உடல் வெப்பநிலை சோதனைக்கு உட்படுவதுடன்,முகக்கவசங்களையும் அணிவது கட்டாயமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் (COVID-19) தொற்று காரணமாக பிரித்தானியாவிற்குள் நுழைவதற்கு புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

குறித்த புதிய கட்டுப்பாடுகளை https://www.gov.uk/uk-border-control என்ற இணையத்தளத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments