28.6 C
Jaffna
Wednesday, September 23, 2020
Home Sports Outdoor 2011 உலகக்கோப்பை போட்டியில் சூதாட்ட சர்ச்சை குறித்து இலங்கை அரசின் அதிரடி உத்தரவு!

2011 உலகக்கோப்பை போட்டியில் சூதாட்ட சர்ச்சை குறித்து இலங்கை அரசின் அதிரடி உத்தரவு!

2011ல் நடைபெற்ற கிரிக்கெட் உலக கோப்பை இறுதி போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக எழுந்த புகார் தொடர்பாக இலங்கை அரசு குற்றவியல் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி டோனி தலைமையிலான இந்திய அணி 28 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை கைப்பற்றியது.

இந்த உலக கோப்பையை நாங்கள் விற்று விட்டோம்,இறுதி ஆட்டத்தில் ‘மேட்ச் பிக்சிங்’ என்ற சூதாட்டம் நடந்துள்ளது,இல்லாவிட்டால் இலங்கை அணி கோப்பையை வென்றிருக்கும்.இதில் வீரர்களுக்கு தொடர்பு கிடையாது. ஆனால் பிக்சிங்கில் குறிப்பிட்ட சில குழுக்கள் ஈடுபட்டது.

இதனை தொடர்ந்து, இந்த போட்டியில் சூதாட்டம் நடந்ததாகவும்,அதில் இலங்கை விலைபோய்விட்டதாகவும் அந்நாட்டின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர், மஹிந்தானந்தா அலுத்கமகே சமீபத்தில் பரபரப்பான தகவல்களை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அலுத்காமகேயின் குற்றச்சாட்டு தொடர்பாக இலங்கையில் விளையாட்டுத் தொடர்பான குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணையை மேற்கொள்ளவுள்ளதாக தெரியவந்துள்ளது.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments