28 C
Jaffna
Friday, September 18, 2020
Home News அமெரிக்காவை புறக்கணித்த ஐரோப்பிய ஒன்றியம்!

அமெரிக்காவை புறக்கணித்த ஐரோப்பிய ஒன்றியம்!

கொரோனா பாதிப்பு காரணமாக பாதுகாப்பான நாடுகள் பயணப்பட்டியலில் இருந்து அமெரிக்காவை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தில் வெளிப்புற எல்லைகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. 27 உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றிய ஆணையம்,அதன் எல்லைகளுக்கு அப்பால் 14 நாடுகளில் இருந்து சுற்றுலா மற்றும் வணிக பயணங்கள் மேற்கொள்ள ஒப்புதல் அளித்தது.

அல்ஜீரியா,ஆஸ்திரேலியா,கனடா,ஜார்ஜியா,ஜப்பான்,மாண்டினீக்ரோ,மொராக்கோ, நியூசிலாந்து,ருவாண்டா,செர்பியா,தென் கொரியா,தாய்லாந்து,துனிசியா மற்றும் உருகுவே ஆகிய நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்தது.

குறிப்பாக தெற்கு ஐரோப்பாவின் நாடுகள் கொரோனா தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால்,இந்த நடவடிக்கை ஐரோப்பிய ஒன்றிய பயணத் தொழில் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தை விட அமெரிக்கா,ரஷ்யா,பிரேசில் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பயணப் பட்டியலிலிருந்து அமெரிக்காவின் பெயரை நீக்கியது ஐரோப்பிய ஒன்றியம்!

இந்நிலையில் குறிப்பிட்ட நாடுகள் அனுமதி ஒப்புதலுக்காக குறைந்தது இரண்டு வாரங்கள் காத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments