28.2 C
Jaffna
Saturday, September 19, 2020
Home News Asia வடக்கு கிழக்கில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம்!

வடக்கு கிழக்கில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம்!

நாட்டில் கொழும்பிற்கு அடுத்தப்படியாக திருகோணமலை,மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலேயே அதிகளவானோர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

தொற்று நோய் தடுப்பு பிரிவின் புள்ளி விபரங்களில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் இந்த வருடம் இதுவரையான காலப்பகுதி வரையில் 2 ஆயிரத்து 228 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் குறித்த காலப்பகுதி வரையில் டெங்கு நோயினால் 2 ஆயிரத்து 182 பேர் பீடிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இரண்டு மாவட்டங்களிலும் வருடத்தின் ஆரம்ப காலப்பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டாது.

எனினும் கடந்த இரண்டு மாதங்களில் திருகோணமலை,மட்டக்களப்பு மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின்;எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகின்றது.

எனினும் யாழ்ப்பாணத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரையில் ஆயிரத்து 902 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த மாவட்டத்தில் ஜனவரி மாதத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாங் காணப்பட்டுள்ளனர்.

பின்னர் அதன் எண்ணிக்கை படிப்படியாக குறைந்த போதிலும் கடந்த மே மாதம் யாழ்ப்பாணத்தில் 112 பேர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை,கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாங்காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய அந்த மாவட்டத்தில் இந்த வருடம் இதுவரையான காலப்பகுதி வரையில் 3 ஆயிரத்து 105 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் முல்லைத்தீவு,கிளிநொச்சி மன்னார் மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோயின் பரவல் குறைவாகவே காணப்படுகின்றது.

இந்த வருடம் இதுவiரான காலப்பகுதி வரையில் முல்லைத்தீவில் 65 பேரும், கிளிநொச்சியில் 115 பேரும்,மன்னாரில் 121 பேரும்,நுவரெலியாவில் 130 பேரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் மொனராகலை மாவட்டத்தில் டெங்கு நோயினால் எவரும் பாதிக்கப்படவில்லை என்பது விசேட அம்சமாகும்.

நாடு முழுவதும் வருடத்தின் ஆரம்ப காலப்பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.

பின்னர் குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடளாவிய ரீதியில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலத்தில் அதன் எண்ணிக்கை குறைந்துள்ளமையை தொற்று நோய் தடுப்பு பிரிவின் தரவுகளில் அவதானிக்க முடிகின்றது.

எனினும் தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments