28.7 C
Jaffna
Friday, September 18, 2020
Home News Asia ஜனாதிபதி வெளியிட்ட அதிரடி உத்தரவு!

ஜனாதிபதி வெளியிட்ட அதிரடி உத்தரவு!

கொரோனா தொற்று சர்வதேச ரீதியில் முழுமையாக இல்லாதொழியும் வரை கலைஞர்கள் காத்திருக்காது நாட்டின் பொருளாதாரத்தை ஒருங்கிணைக்க உதவுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள சினிமா மற்றும் நாடகத்துறை கலைஞர்களுடன் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை,எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்,பிரசார நடவடிக்கைகளுக்காக தனது புகைப்படங்களை பயன்படுத்தக்கூடாதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன்,பாதுகாப்பு சேவைகள்,அரச சேவைகள்,கூட்டுத்தாபனங்கள்,சபைகள, நியதிச்சட்ட நிறுவனங்களில் சேவையில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்கள் எவரும் அரசியல் பணிகளில் ஈடுபடக் கூடாது என்றும் ஜனாதிபதி பணித்துள்ளார்.

பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது பிரசார நடவடிக்கைகளில் ஜனாதிபதியின் புகைப்படங்களை பயன்படுத்துவதாகவும்,இராணுவம் மற்றும் அரச அதிகாரிகளை தொடர்பு படுத்திக் கொள்வதாகவும் பல்வேறு நியமனங்களை பெற்றுத் தருவதாக குறிப்பிடுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்,அனைத்து ஆளுநர்கள்,அமைச்சின் செயலாளர்கள்,மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள்,கூட்டுத்தாபனங்கள்,சபைகள்,நியதிச்சட்ட நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் ஏனைய துறைத் தலைவர்களுக்கு,ஜனாதிபதி செயலாளரினால் நேற்று அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் ஜனாதிபதியின் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அதன் பிரதியொன்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments