27 C
Jaffna
Thursday, October 29, 2020
Home News Europe கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத பாதுகாப்பான 14 நாடுகளை வெளியிட்டுள்ள ஐரோப்பிய யூனியன்!

கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத பாதுகாப்பான 14 நாடுகளை வெளியிட்டுள்ள ஐரோப்பிய யூனியன்!

கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத பாதுகாப்பான 14 நாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிப்பதாக,ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது.

சீனாவில் முதன் முதலில் தென்பட்டதாக கூறப்படும் இந்த கொரோனா வைரஸ், அதன் பின் மார்ச் மாதத்தில் உலகின் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது.

இதன் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இதனால்,இந்த நோயின் பரவலை தடுப்பதற்காக,மற்ற நாடுகளை சேர்ந்தவர்களை அனுமதிக்க வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி இருந்தது.

தற்போது சில நாடுகளை தவிர மற்ற நாடுகளில் நோயின் தீவிரம் சற்றுகுறைந்து காணப்படுகிறது.

இந்தநிலையில் நோய் பாதிப்பு அதிகம் இல்லாத பாதுகாப்பான 14 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிப்பதாக ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது.

பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் அல்ஜீரியா,அவுஸ்திரேலியா,கனடா,ஜார்ஜியா, ஜப்பான்,மொராக்கோ,நியூசிலாந்து,ருவாண்டா,செர்பியா,தென்கொரியா,தாய்லாந்து, துனிசியா,உருகுவே,மான்டெனக்ரோ ஆகிய நாடுகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.

இந்த பட்டியலில் அமெரிக்கா,பிரேசில் மற்றும் சீனா ஆகிய நாடுகள் இடம்பெறவில்லை.எனவே இந்த நாடுகளை சேர்ந்தவர்கள் ஐரோப்பிய யூனியனுக்கு செல்ல அனுமதி இல்லை.

Most Popular

ட்ரம்ப்பிற்கு சீனாவில் வங்கி கணக்கு!!!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு சீனாவில் வங்கி கணக்கு உள்ள தகவல் இன்று வெளிவந்துள்ளது. அவரது வருமான வரி செலுத்தும் முறைமையூடாக இந்த விடயம் தெரியவந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. ஆட்சி அமைத்த காலத்திலிருந்து சீனாவுக்கு...

Bank account for Trump in China !!!

US President Donald Trump has a bank account in China released today. According to international reports, the matter came to light through his income tax...

Three jailed in Batticaloa!

Three persons involved in child abuse have been sentenced to life imprisonment in Batticaloa today. Judge M.Y.M.Issadeen has sentenced a man (64) to 09 years...

மட்டக்களப்பில் மூவருக்கு கடூழிய சிறை!

இன்று மட்டக்களப்பில் சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட மூவருக்கு கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு மட்டக்களப்பு, பனிக்கையடி பிரதேசத்தில் 06 வயது சிறுமியை கடத்திச்சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவருக்கு(வயது 64) 09 வருட கடூழிய சிறைத்தண்டனைக்கு...

Recent Comments