28.5 C
Jaffna
Tuesday, September 22, 2020
Home News Asia பிரித்தானியாவை மிரட்டும் சீனா!

பிரித்தானியாவை மிரட்டும் சீனா!

மூன்று மில்லியன் ஹொங்ஹொங் நாட்டவர்களுக்கு சீன கொடுங்கோலாட்சியிலிருந்து தப்பிக்க வழி வகை செய்துள்ளதற்காக,பிரித்தானியாவை பழிக்குப்பழி வாங்குவோம் என சீனா இன்று மிரட்டல் விடுத்துள்ளது.

சீனா புதிய பாதுகாப்பு சட்டத்தின் மூலம் ஹொங்ஹொங்கின் சுதந்திரத்தைக் கழுத்தை நெறிப்பதாக பிரித்தானியா குற்றம் சாட்டிய சில மணி நேரத்திற்குள்,லண்டனிலுள்ளசீன தூதரகம்,ஹொங்ஹொங் நாட்டவர்களுக்கு பிரித்தானியா விடுத்துள்ள அழைப்பு சர்வதேச விதிமுறைகளை மீறும் செயல் என குறிப்பிட்டதோடு,இந்த நடவடிக்கையை உறுதியாக எதிர்ப்பதாகவும்,தக்க பதில் நடவடிக்கை எடுப்போம் என்றும் பிரித்தானியாவை மிரட்டியுள்ளது.

இது தொடர்பாக சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தேசிய பாதுகாப்புச் சட்டத்தை தனிப்பட்ட முறையில் உணர்வு ரீதியாக பார்க்காமல் சீனாவின் நிலைப்பாட்டை மதித்து,ஹொங்ஹொங் விடயத்தில் எவ்வகையிலும் தலையிடுவதிலிருந்து விலகிச்செல்லுமாறு பிரித்தானியாவை வலியுறுத்துகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினை சீனாவுடனான பிரித்தானிய உறவில் மீண்டும் ஒரு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில்,பிரித்தானியாவைப் போலவே தனது அரசும் ஹொங்ஹொங் மக்களுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பாக ஆலோசித்து வருவதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட்மோரிசனும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments