28.3 C
Jaffna
Saturday, September 19, 2020
Home News லடாக் மோதலில் எச்சரிக்கும் வெள்ளை மாளிகை!

லடாக் மோதலில் எச்சரிக்கும் வெள்ளை மாளிகை!

உலகில் பல்வேறு நாடுகளிடம் சீனா இராணுவ ரீதியாக அத்து மீறுவது போன்று, இந்தியாவுடனும் அத்து மீறி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

இந்தியா மற்றும் சீனா இடையிலான லடாக் மோதலை உலக நாடுகள் கவனிக்க தொடங்கியுள்ளது.

இதில்,சீனா செய்யும் அத்துமீறலை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

லடாக் பிரச்சனை பொறுத்தவரை இந்தியாவிற்கு ஆதரவாக இருப்போம்,இந்தியாவிற்கு ஆதரவாக படைகளை அனுப்புவோம் என்று அமெரிக்கா வெளிப்படையாக கூறிவிட்டது.

இந்நிலையில் இந்தியா- சீனா மோதல் தொடர்பாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில்,இந்தியா – சீனா இடையே எல்லையில் ஏற்பட்டுள்ள மோதல் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த மோதலை நாங்கள் தீவிரமாக கவனித்து வருகிறோம்.இரண்டு நாடுகளின் நிலைப்பாட்டை விசாரித்து வருகிறோம்.அவர்களின் பேச்சுவார்த்தைகளை பின் தொடர்ந்து வருகிறோம்.

இரண்டு நாடுகளும் பிரச்சனையை தீர்க்க முயன்று வருவது தெரியும்.எல்லை பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.பிரச்சனை மேலும் மோசமாக கூடாது என்று இந்தியாவும் – சீனாவும் விரும்புகிறது.

இதனால் லடாக் எல்லையில் விரைவில் பிரச்சனை தீரும் என்று எதிர்பார்க்கிறோம். எல்லையில் பழைய நிலைமை திரும்ப வேண்டும் என்பது தான் அமெரிக்காவின் விருப்பம்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் இதில் சீனாவின் செயல்களை கண்காணித்து வருகிறார்.சீனா உலகம் முழுவதும் அத்துமீறி வருகிறது. உலகின் பிற நாடுகளில் சீனா எப்படி அத்துமீறுகிறதோ அதே போல இந்தியாவிலும் அத்துமீறுகிறது என்று டிரம்ப் நம்புகிறார்.

இதனால் இந்தியாவிலும் சீனா அதே போன்ற முறையை பயன்படுத்தி,அத்துமீறலை நிகழ்த்தி வருகிறது.இதைத்தான் நாங்கள் கவனிக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments