28.2 C
Jaffna
Sunday, August 9, 2020
Home Business இலங்கை வரலாற்றில் புதிய உச்சத்தைத் தொட்டது தங்கத்தின் விலை!

இலங்கை வரலாற்றில் புதிய உச்சத்தைத் தொட்டது தங்கத்தின் விலை!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை,வரலாற்றில் இல்லாதளவு உச்ச விலையைத் தொட்டுவருகின்றது.

அதனடிப்படையில் இலங்கையில் (ஜூலை 3) வெள்ளிக்கிழமை 24 கரட் தூய தங்கத்தின் விலை 93 ஆயிரத்து 500 ரூபாயை எட்டியுள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் இலங்கையில் தங்கத்தின் விலை விரைவில் ஒரு லட்சத்தை தாண்டும் என தங்கம் இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ஆயிரத்து 789 டொலரைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

அதன்படி கடந்த ஜூன் 18ஆம் திகதியிலிருந்து இன்று வரை,சர்வதேச தங்கம் விலை ஆயிரத்து 722 டெலரில் இருந்து ஆயிரத்து 789 டாலரைத் தொட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை யாழ்ப்பாணத்தில்  (ஜூலை 3) வெள்ளிக்கிழமை 22 கரட்ஆபரணத் தங்கத்தின் விலை 85 ஆயிரத்து 700 ரூபாயாகக் காணப்படுகிறது.

அதேபோல 24 கரட் தூய தங்கத்தின் விலை 93 ஆயிரத்து 500 ரூபாயாகக் காணப்படுகிறது.

0 Reviews

Most Popular

2021-ம் ஆண்டு 20 ஓவர் உலககோப்பை போட்டி எங்கு நடைபெறவுள்ளது தெரியுமா?

2021-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்துவது என்று ஐ.சி.சி. கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் அக்டோபர்,நவம்பர்...

ஓய்வு தொடர்பில் டோனியின் அறிவிப்பு!

இந்திய அணியின் முன்னாள் அணித் தலைவர் டோனி தாம் எப்போது ஓய்வை அறிவிப்பேன் என்பதை சூசகமாக அப்போதெ தெரிவித்துள்ளார் என தெரியவந்துள்ளது. டோனி இந்தியாவுக்காக மீண்டும் கிரிக்கெட் விளையாடுவாரா அல்லது ஒய்வு பெறும் முடிவை...

பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள செய்தி!

நாளை முதல் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை கட்டம் கட்டமாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை முதல் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு விசேட முறைமைகள் கையாளப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். ஒரு மீற்றர் இடைவெளியை பேணி...

புதிய பிரதமராக மகிந்த ராஜபக்‌ஷ இன்று பதவியேற்பு!

புதிய அரசாங்கத்தின் பிரதமராக மகிந்த ராஜபக்‌ஷ இன்று பதவியேற்கவுள்ளார். களனி ரஜமகாவிகாரையில் இன்று காலை 8.30க்கு அவர் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான மகிந்த ராஜபக்‌ஷ 4வது தடவையாக பிரதமராக பதவியேற்கவுள்ளார். நடைபெற்று...

Recent Comments