28.7 C
Jaffna
Friday, September 18, 2020
Home News Europe சுவிஸ் செல்லும் வெளிநாட்டவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!

சுவிஸ் செல்லும் வெளிநாட்டவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!

ஜூலை 6 முதல் சுவிட்சர்லாந்து செல்பவர்கள்,குறிப்பாக அதிக அபாயம் உள்ள நாடுகளிலிருந்து வருபவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சமீபத்தைய நாட்களில் சுவிட்சர்லாந்தில் புதிதாக கொரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளதையடுத்து இந்த விதிமுறை அமுல்படுத்தப்பட உள்ளது.

ஜூன் மாத மத்தியிலிருந்து,Schengen மற்றும் Schengen அல்லாத நாடுகளிலிருந்து கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் சுவிட்சர்லாந்துக்குள் நுழையத் தொடங்கியதையடுத்து சுவிட்சர்லாந்தில் புதிதாக கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது என்று கூறியுள்ளது அரசு.

அதன் காரணமாக,ஜூலை 6 முதல் குறிப்பிட்ட நாடுகளிலிருந்து வருவோர் சுவிட்சர்லாந்துக்குள் நுழைந்ததும் தங்களை 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என பெடரல் கவுன்சில் தெரிவித்துள்ளது.

அதிக அபாயம் உள்ளவை எனக் கருதப்படும் நாடுகள் ஸ்வீடன்,செர்பியா,கொசோவா, அமெரிக்கா,இஸ்ரேல்,ரஷ்யா ஆகிய நாடுகள் அதிக அபாயம் உள்ள நாடுகள் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளன.

இதுபோக,அர்ஜெண்டினா,ஆர்மீனியா,அசர்பைஜான்,பஹ்ரைன்,பெலாரஸ்,பொலிவியா,பிரேசில்,காபோ வெர்டே,சிலி,டொமினியன் குடியரசு,ஹோண்டுராஸ்,ஈராக்,கத்தார், கொலம்பியா,குவைத்,மால்டோவா,வடக்கு மாசிடோனியா,ஓமான்,பனாமா,பெரு, சவுதி அரேபியா,தென்னாப்பிரிக்கா டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகள்.

நோய்வாய்ப்பட்டதுபோல் தோன்றும் யாரும்,சுவிஸ் செல்லும் பேருந்து,ரயில் அல்லது விமானங்களில் ஏற அனுமதிக்கப்படமாட்டார்கள்.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments