28.6 C
Jaffna
Monday, September 28, 2020
Home News வட கொரியாவின் அதிரடி அறிவிப்பு!

வட கொரியாவின் அதிரடி அறிவிப்பு!

அமெரிக்காவுடன் வட கொரியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியமில்லை, இது அமெரிக்காவுக்கான ‘அரசியல் கருவி’ என்பதைத் தவிர வேறொன்றுமில்லை என வட கொரியாவின் மூத்த தூதர் சோ சோன் ஹுய் கூறினார்.

வட கொரியாவுடன் முடங்கிய பேச்சுவார்த்தை பற்றி விவாதிக்க அமெரிக்க துணை வெளியுறவு செயலாளர் ஸ்டீபன் பீகன் அடுத்த வாரம் தென் கொரியாவுக்கு செல்ல உள்ள நிலையில் வட கொரியா தரப்பில் இவ்வாறு கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் செயல்படாது என்றும் வட கொரியாவின் கொள்கையில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் துணை வெளியுறவுத் துறை அமைச்சர் சோ சோன் ஹுய் கூறினார்.

அமெரிக்காவுடன் பேச்சுவார்ததையில் ஈடுபட வேண்டிய அவசியத்தை நாங்கள் உணரவில்லை,ஏனெனில் அவர்கள் வடகொரியா-அமெரிக்கா உறவை கருத்தில் கொள்ளவில்லை.

இந்த உரையாடல் அதன் அரசியல் நெருக்கடியை எதிர்கொள்வதற்கான ஒரு கருவி தவிர வேறொன்றுமில்லை என்று சோ சோன் ஹுய் கூறினார்.

டிரம்பும் கிம் ஜாங் உனும் சிங்கப்பூரில் 2018-ல் முதல் முறையாக சந்தித்தனர்.

2019 ஆம் ஆண்டில் அவர்கள் மீண்டும் வியட்நாமில் சந்தித்தனர்,ஆனால் சர்வதேச தடைகளை நீக்குவதற்கு ஈடாக கிம் போதுமான அணு ஆயுதங்கள் அல்லது பாலிஸ்டிக் ஏவுகணைகளை வழங்கத் தவறிவிட்டார் என்று டிரம்ப் கூறியபோது பேச்சுவார்த்தை முறிந்தது.

2019 ஜூன் மாதம் இரு கொரியா நாடுகளையும் பிரிக்கும் இராணுவமயமாக்கப்பட்ட மண்டலத்தில் அவர்களின் மூன்றாவது சந்திப்பு இடம்பெற்றது,இதன் போது இருவரும் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க ஒப்புக்கொண்டனர்.

அக்டோபரில் ஸ்வீடனில் இரு தரப்பினருக்கும் இடையிலான பணி நிலை பேச்சுவார்த்தைகள் முறிந்தன.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments