28.3 C
Jaffna
Saturday, September 19, 2020
Home News Asia இலங்கையர்களை தனிமைப்படுத்தும் பிரித்தானியா!

இலங்கையர்களை தனிமைப்படுத்தும் பிரித்தானியா!

தமது நாட்டுக்கு சுற்றுலா வரும் 59 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளை இரண்டு வார கட்டாய தனிமைப்படுத்துவதில் இருந்து விடுவிப்பதற்கு பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் கோடை விடுமுறையை கழிப்பதற்காக பெருமளவு சுற்றுலாப் பயணிகள் பிரித்தானியா செல்லவுள்ள நிலையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சட்ட நீக்கம் எதிர்வரும் 10ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு விடுவிக்கப்படும் நாடுகளில் ஜேர்மன்,நியூசிலாந்து,கிரீஸ்,அவுஸ்திரேலியா, ஹொங்கொங்,தென்கொரியா,இத்தாலி,ஸ்பெயின்,ஜப்பான் உட்பட 59 நாடுகள் பெயரிடப்பட்டுள்ளன.

எனினும்,அமெரிக்கா,சீனா,போர்த்துக்கல்,கனடா உட்பட ஆபிரிக்கா,மத்திய கிழக்கு மற்றும் இலங்கை உட்பட ஆசிய நாடுகளை சேர்ந்தவர்களுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் நடவடிக்கை விடுக்கப்பட்ட நாடுகளின் பட்டியலை வெளியிட்ட பிரித்தானிய பிரதமர்,இது பிரித்தானியாவை வழமைக்கு கொண்டு வரும் வேலைத்திட்டத்தின் முதலாவது மற்றும் பாரிய நடவடிக்கையாகும் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் எதிர்வரும் நாட்களில் மேலும் பல நாடுகளில் இருந்து செல்லும் சுற்றுலா பயணிகளும் இந்த விடுவிக்கப்பட்ட பட்டியலுக்குள் இணைக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் பிரித்தானிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments