28.6 C
Jaffna
Monday, September 28, 2020
Home News உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

கொரோனா பாதிப்புடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் மலேரியா மருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் எச்.ஐ.வி மருந்து லோபினாவிர் / ரிடோனவீர் ஆகியவற்றின் சோதனைகளை நிறுத்துவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட மருந்துகள் கொரோனா நோயாளிகளின் இறப்பைக் குறைக்காததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

தரமான மருத்துவ கவனிப்புடன் ஒப்பிடும் போது இந்த இடைக்கால சோதனை முடிவுகள்,ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் லோபினாவிர் / ரிடோனாவிர் ஆகியவை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கொரோனா நோயாளிகளின் இறப்பு விகிதத்தை குறைக்கவில்லை என்பதைக் காட்டுகின்றன.

சோதனை ஆய்வாளர்கள் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் சோதனைகளை நிறுத்துவார்கள் என்று உலக சுகாதார அமைப்பு அறிக்கையில் கூறியது.

சோதனையின் சர்வதேச வழிநடத்தல் குழுவின் பரிந்துரையின் பேரில் எடுக்கப்பட்ட இந்த முடிவு,மருத்துவமனையில் சேர்க்கப்படாத நோயாளிகளுக்கு மருந்துகள் அல்லது நோய்த்தடுப்பு மருந்துகளாகப் பயன்படுத்தப்படும் பிற ஆய்வுகளை பாதிக்காது என்று உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments