28.4 C
Jaffna
Tuesday, September 22, 2020
Home News அத்துமீறினால் விளைவுகள் மோசமாகும்!

அத்துமீறினால் விளைவுகள் மோசமாகும்!

அமெரிக்கா சீன கடல் எல்லையில் நிறுத்தி உள்ள அணு ஆயுத போர் கப்பல்களை ஏவுகணை கொண்டு தாக்கி அழிப்போம் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் இருந்தே தென் சீன கடல் எல்லையில் மோதல் நிலவி வருகிறது.

தென் சீன கடல் எல்லை பகுதியில் 90% எங்களுக்கு தான் சொந்தம் என்று சீனா சொந்தம் கொண்டாடி வரும் நிலையில் சீனாவின் ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்கா தனது படைகளை குவித்து வருகிறது.

இதேவேளை சீனாவை அடக்கும் வகையில் தற்போது அங்கு மேலும் இரண்டு போர் கப்பல்களை அமெரிக்கா களமிறக்கி உள்ளது.இந்த இரண்டு கப்பல்களும் அணு ஆயுத ஏவுகணைகளை ஏவும் திறன் கொண்டது.

அமெரிக்காவின் செயற்பாடு சீனாவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவும் DF-21D மற்றும் DF-26 என்ற இரண்டு ஏவுகணைகளை அந்த பகுதியை நோக்கி திருப்பி உள்ளது.

சீனாவை குறிவைக்கும் இந்தியாவின் அதிநவீன ஏவுகணை; சீனாவின் நிலைதான் என்ன?அமெரிக்கா அத்துமீறினால் போர் கப்பல்களை தாக்கி அழிப்போம் என சீனா கூறிய நிலலையில்,உங்களை பார்த்தும் உங்களின் ஏவுகணைகளை பார்த்தும் எங்களுக்கு அச்சம் இல்லையென அமெரிக்கா பதிலடி கொடுத்துள்ளது.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments