28.5 C
Jaffna
Thursday, September 24, 2020
Home News Asia Hand sanitizer பயன்படுத்துவோருக்கு விடுக்கப்படும் அவசர எச்சரிக்கை!

Hand sanitizer பயன்படுத்துவோருக்கு விடுக்கப்படும் அவசர எச்சரிக்கை!

கொழும்பில் காலாவதியான பொருட்களைப் பயன்படுத்தி Hand sanitizer எனும் கிருமி நாசினிகளை உற்பத்தி செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.

அதற்கமைய மாலபே,தலாஹேன பிரதேசத்தில் காலாவதியான பொருட்களைப் பயன்படுத்தி கிருமிநாசினிகளை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்று நுகர்வோர் அதிகாரி சபையினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஒரு வகையான சுத்திகரிப்பு கிரீமில் ஒரு வகை வண்ண கலவையைப் பயன்படுத்தி கிருமிநாசினி தயாரிக்கப்பட்டுள்ளது.அந்த கிரீம் வகை 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காலாவதியாகியுள்ளது.

இந்த கிரீம் வகையை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட Hand sanitizer எனும் கிருமிநாசினிகள் கடைகளுக்கு அனுப்புவதற்காக தயார் நிலையில் காணப்பட்டதென சுகாதார அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனத்தை நடத்தி சென்ற சந்தேக நபர்,இன்னமும் அந்த கிரும நாசினிகளை கடைகளுக்கு விடுவிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.கைப்பற்றப்பட்ட கிருமி நாசினிகளை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

தான் கொள்வனவு செய்த கீரீம் வகை காலாவதியாகிய பின்னர் கிருமி நாசினி தயாரித்து விற்பனை செய்வதற்கு தனக்கு எண்ணம் வந்ததாக சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.

சுற்றிவளைப்பின் போது மீட்கப்பட்ட Hand sanitizer பெறுமதி 50 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தப்பித் கொள்வதற்காக அதிகளவானோர் Hand sanitizer எனும் கிருமி நாசினியை பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments