28.3 C
Jaffna
Saturday, September 19, 2020
Home Lifestyle சீனாவின் ராஜதந்திரத்தை அம்பலப்படுத்திய கனடா பிரதமர் ஜஸ்ட்டின்!

சீனாவின் ராஜதந்திரத்தை அம்பலப்படுத்திய கனடா பிரதமர் ஜஸ்ட்டின்!

சீனா பணயக் கைதிகளை பிடித்து வைத்துக் கொண்டு,வேண்டியதை அடைய நினைக்கும் ராஜதந்திரத்தை கனடா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ அம்பல்ப்படுத்தியுள்ளார்.

ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளை மீறியதாகக் கூறி சீனாவின் ஹுவேய் நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரி மெங் வான்சூ மீது அமெரிக்கா குற்றஞ்சாட்டியது.

இதையடுத்து,கனடா அரசு மெங் வான்சூவைக் கைது செய்து சிறையில் அடைத்தது. அவரை விசாரணைக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்க அரசு எடுத்து வருகிறது.

இந்நிலையில் தான் கனடா நாட்டவர்களான மைக்கேல் கோவ்ரி,மைக்கேல் ஸ்பேவர் ஆகிய இருவர் உளவு பார்த்ததாகக் கூறிச் சீன அரசு அவர்களை கைது செய்தது.

இவர்கள் இருவரையும் விடுவிக்க வேண்டுமானால்,மெங் வான்சூவை விடுவிக்க வேண்டும் எனச் சீன அரசு கூறியது.

நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடும் இந்தத் திட்டத்தை ஏற்க கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மறுத்துவிட்டார்.

குற்றவாளிகளை நாடு கடத்த ஹாங்காங்குடன் செய்திருந்த உடன்பாட்டையும் ரத்து செய்துவிட்டார்.இதேபோல் ஹாங்காங்குக்கு இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களின் ஏற்றுமதிக்கும் தடை விதித்துவிட்டார்.

கைதிகளைப் பரிமாறிக் கொள்ளும் திட்டத்தைக் கனடா பிரதமர் நிராகரித்தது சீனாவின் பணயக் கைதி ராஜதந்திரத்தை அம்பலப்படுத்தியுள்ளது.

ஒருமுறை விட்டுக்கொடுத்துவிட்டால் சீனா அடுத்த இலக்கைக் குறிவைக்கும் என்பதை அறிந்து கனடா பிரதமர் இவ்வாறு தவிர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments