28.5 C
Jaffna
Thursday, September 24, 2020
Home Lifestyle Food தினமும் மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!

தினமும் மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!

ஆரோக்கியமான உணவு பட்டியலில் மீனுக்கு ஒரு தனி இடம் உண்டு.மீனில் பல்வேறு முக்கிய ஊட்டச்சத்துகள் அடங்கி உள்ளன.

புரதம்,வைட்டமின் டி,கால்சியம்,பாஸ்போரஸ் போன்றவை மீனில் அதிகம் இருக்கும் ஊட்டச்சத்துகள் ஆகும்.

இரும்பு,ஜின்க்,ஐயோடின்,மெக்னீசியம்,பொட்டஷியம் போன்ற மினரல்கள் மீனில் அதிகம் காணப்படுகின்றன.

ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தின் ஆதாரமாக விளங்குவது மீன்.உடலை ஒல்லியாக வைக்க இந்த சத்து பெரிதும் உதவுகிறது.

மீனை தொடர்ந்து சாப்பிடுவதால்,பல நோய்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன.குறிப்பாக இதயம் சார்ந்த நோய்கள் கட்டுப்படுகின்றன.

தினமும் மீன் சாப்பிடுவதால்,இரத்தக் குழாய் மற்றும் இதயம் சார்ந்த நோய் அபாயங்கள் குறைகின்றன.

மூளை சீராக செயலாற்ற,மீன் உணவுகள் பெருமளவில் உதவுகின்றன.இதனால், அல்சைமர் நோய்க்கு,மீன் சாபிடுவது பரிந்துரைக்கப்படுகிறது.

மனச்சோர்விற்கான அறிகுறியை உணர்பவர்கள்,மீனை சாப்பிடலாம்.மீன் அல்லது மீன் எண்ணெய்,மனச்சோர்வின் அறிகுறியை குறைத்து சீரான மன நிலையை தருகிறது. இதனால் மன ஆரோக்கியம் அதிகரிக்கிறது.

மீனில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம்,கண் பார்வையை அதிகரித்து,கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

நீண்ட நேரம் தூக்கம் வராமல் தவித்து கொண்டிருப்பவர்கள்,மீனை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.

மீனை அதிகம் உட்கொள்பவர்கள்,நல்ல ஆழ்ந்த தூக்கத்தை பெற்றிருக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.

மீனில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம்,உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.

மாதவிடாய்க்கு முந்தய அறிகுறிகளான,குமட்டல்,வாந்தி,தலைவலி,மன உளைச்சல், உடல் வலி,போன்றவற்றால் அவதி படும் பெண்கள் மீனை தங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதால்,அவர்களின் இந்த அறிகுறிகள் குறைவதாக ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments