28.4 C
Jaffna
Tuesday, September 22, 2020
Home News பிரித்தானியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வடகொரியா!

பிரித்தானியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வடகொரியா!

வடகொரியா மீது பொருளாதாரத் தடைகளை அறிமுகப்படுத்தியதற்காக பிரித்தானியா உரிய விலையை தர வேண்டி இருக்கும் என அந்த நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வட கொரிய சிறை முகாம்களில் கட்டாய வேலை,சித்திரவதை மற்றும் கொலை ஆகியவற்றில் ஈடுபட்ட குழுக்களுக்கு எதிராக அபராதம் விதிப்பதாக பிரித்தானிய அரசாங்கம் அறிவித்தது.

இதில் ஆத்திரமடைந்த கிம் ஜாங் வுன் தலைமையிலான வடகொரியா நிர்வாகம்,அமெரிக்காவின் கைப்பாவையான பிரித்தானியா அரசு ஒரு ஆத்திரமூட்டும் செயலைச் செய்துள்ளது என காட்டமாக பதிவு செய்துள்ளது.

வடகொரியாவில் செயல்பட்டுவரும் மாநில பாதுகாப்பு பணியகம் 7 மற்றும் மக்கள் பாதுகாப்பு திருத்த பணியகம் ஆகிய இரு குழுக்களின் மீதும் பிரித்தானியா தற்போது நடவடிக்கை முன்னெடுத்துள்ளது.

பிரித்தானியாவின் புதிய உலகளாவிய மனித உரிமை ஆட்சியின் கீழ் முதல் தடைகளின் ஒரு பகுதி இதுவென கூறப்படுகிறது.

வடகொரியாவின் இந்த இரு மர்ம குழுக்களின் மீது மட்டுமல்ல,ரஷ்யாவில் இயங்கும் இதுபோன்ற 25 குழுக்கள் மீதும்,சவுதி அரேபியாவில் செயல்படும் 20 குழுக்கள் மீதும் தடை விதித்துள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.

பிரித்தானியாவின் சமீபத்திய நடவடிக்கையானது அமெரிக்காவின் விரோதக் கொள்கையை ஆதரிப்பதற்கான ஒரு அப்பட்டமான அரசியல் சதி என்று வட கொரிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அறிக்கையின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

உள்நாட்டு விவகாரங்களில் வன்முறை தலையீடு என நமது நாட்டின் பாதுகாப்பிற்கு பொறுப்பான நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க இங்கிலாந்து துணிந்ததை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம், நிராகரிக்கிறோம் என அந்த அறிக்கையில் வட கொரிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே,வட கொரியாவின் அணு ஆயுதத் திட்டம் அல்லது அந்த நாடு மீது விதிக்கப்பட்ட சர்வதேச தடைகள் குறித்து சமரசம் காண வட கொரியாவும் அமெரிக்காவும் தவறிவிட்ட நிலையில்,பிரித்தானியாவின் இந்த அதிரடி முடிவு வடகொரியாவை ஆத்திரமூட்ட செய்துள்ளது.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments