யாழில் நிறை வெறியில் வீதியில் நின்று தள்ளாடும் தாயும் மகளும்!! (வீடியோ)
யாழ்ப்பாணம், சுனனாகம் பகுதியில் மது போதையில் நடு வீதியில் விழுந்து கிடந்த தாயும், மகளும் மீட்கப்பட்டுள்ளனர். மகள் தப்பியோடி விட்ட நிலையில், தாயார் பொலிசாரால் எச்சரிக்கப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தரோடை பகுதியில் உள்ள பௌத்த விகாரைக்கு அண்மையில் உள்ள இராணுவ முகாமுக்கு எதிராக இந்த சம்பவம் நடந்தது.
வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த தாயும், மகளுமே மதுபோதையில் விழுந்திருந்தனர். மகளுக்கு 29 வயது, தாயாருக்கு 53 வயது.
நேற்று இரவு 7.30 மணியளவில் மோட்டார் சைக்கிளுடன் இரண்டு பெண்கள் வீதியில் விழுந்து கிடந்ததை அவதானித்த பிரதேச இளைஞர்கள், அவர்கள் நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என நினைத்து, ஏனைய இளைஞர்களையும் திரட்டி உதவிக்கு விரைந்தனர்.
இரண்டு பெண்களின் அருகில் சென்று, அவர்களிற்கு என்ன நடந்தது என விசாரித்த போதே, மது வாடை குப்பென வீசியுள்ளது.
நடந்ததை புரிந்து கொண்ட இளைஞர்கள், இரண்டு பெண்களிடமும் பேச்சு கொடுத்து, தகவல்களை கறந்துள்ளனர்.
அந்த பகுதியிலுள்ள வட்டிக்கு பணம் கொடுக்கும் ஒருவரின் வீட்டிற்கு வந்ததாகவும், அவர் மதுபானம் பருக தந்ததாகவும் பெண்கள் தெரிவித்தனர்.
“வட்டி …… வீட்டுக்கு வந்தோம். சின்னதாக அவருடன் பன் எடுத்து விட்டோம். அது கொஞ்சம் ஏறி விட்டது“ என அந்த பெண்கள் தெரிவித்தனர்.
போதை உச்சத்தில் இருப்பதால் தம்மால் தொடர்ந்து பயணிக்க முடியவில்லை, தம்மை வீட்டுக்கு அனுப்பி வைக்குமாறு பெண்கள் கேட்டுள்ளனர்.
அந்த பகுதியில் இளைஞர்கள் குவிந்து, வீடியோ எடுக்க தொடங்கியுள்ளனர். இதையடுத்து, மகள் அங்கிருந்து ஓடிச்சென்று, அருகிலுள்ள பற்றையொன்றுக்குள் மறைந்து விட்டார். அங்கிருந்தபடி இளைஞர்களுடன் வாய்த்தகராற்றில் ஈடுபட்டார். அவரை பற்றைக்குள்ளிருந்து வெளியே எடுக்க இளைஞர்கள் பெரும் பிரயத்தனப்பட்டனர்.
அவர்கள் இருவரும் போதையில் தள்ளாடி விழுந்த போதெல்லாம், யார் எங்களை தள்ளி விழுத்துகிறீர்கள் என கேட்டபடியிருந்தனர். எந்த வகை மதுபானம் அருந்தினீர்கள் என வினவியபோது, மோட்டார் சைக்கிளின் சீற்றுக்கு கீழ் பகுதியில் எஞ்சிய மதுபானம் வைக்கப்பட்டுள்ளதாகவும், அதை பார்க்குமாறும் கூறினர். மோட்டார் சைக்கிள் சீற் பகுதியை திறந்து பார்த்த போது, அதிக போதையூட்டும் டிசிஎல் வகை சாரயம் பாவிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது.சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிசாருக்கும் அறிவிக்கப்பட்டது.
பொலிசாருக்கு அறிவிக்கப்பட்ட தகவல் தெரிந்ததும், போதையிலிருந்த மகள், மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு தப்பியோடி விட்டார். தாயார் மட்டும் சிக்கிக் கொண்டார்.
பொலிசார் தாயாரை சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று, எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.