விசேட நிவாரணம் வழங்க திட்டம்! இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம்´ காரணமாக பாதிக்கப்பட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் மற்றும் பணியார்களுக்கு விசேட நிவாரணம் வழங்கப்படவுள்ளது.
இதுதொடர்பாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிக்கையில், தற்சமயம் மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன.
இதனால் தனியார் பஸ் உரிமையாளர்கள் மாத்திரமன்றி பணியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனைக் கருத்திற் கொண்டு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.