12 முதல் 19 வயதுக்குட்பட்ட விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை!
12 முதல் 19 வயதுக்குட்பட்ட விசேட தேவையுடைய சிறுவர்களுக்கும், தீராத நோய்களுடன் இருக்கும் சிறுவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படவுள்ளது.
ரிஜ்வே சிறுவர் வைத்திய சாலையில் அவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்கப்படும்.
இது தொடர்பாக பாராளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சர் நேற்று (21) மேலும் தெரிவிக்கையில், நாள்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள 12 வயதிற்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை அடுத்த மாதம் 4 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் ஆரம்பிக்கபடும் என்றும் கூறினார்.
ஏனைய சிறுவர்களுக்கும் இந்த தடுப்பூசியை வழங்க சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.