அக்கரைப்பற்று நீதிமன்ற கட்டடத் தொகுதியில் தீ; மூவர் கைது

(LBC Tamil) அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற கட்டடத் தொகுதியின் ஆவணக் காப்பகத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் யாரோ ஒருவரின் தேவைக்காக தீ வைத்திருக்கலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சார் தெரிவித்தார்.

சந்தேகநபர்கள் மூவரையும் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் இன்று(29) ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களில் இருவர் அக்கரைப்பற்று – பெரியநீலாவணை சுனாமி வீட்டுத்திட்டத்தில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

மற்றைய சந்தேகநபர் அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

குறித்த சந்தேகநபர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையிலுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.