அங்கயன் அறைந்தது உண்மையா?

ஜனநாயக தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன், அரச ஊழியர் ஒருவரை அறைந்ததாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் காணொளி பற்றிய தகவலை முற்றாக மறுத்துள்ளார்.

இந்த காணொளி உண்மைதன்மை குறித்து இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணையின் முடிவில் இந்த வீடியோ இந்தியாவின் மஹாராஸ்டிரா மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவத்தைச் சார்ந்தது என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.

அந்தக் காணொளியில், மயூர் போர்டே என்ற நபர் மஹாராஸ்டிரா வங்கியின் கிளை மேலாளரை அறைந்ததைக் காணலாம். இதனால், சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோவில் அங்கஜன் இராமநாதன் காணப்படுவதாக கூறப்படும் தகவல் பொய்யானது என்பதை அவரது கட்சி அறிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.