அவசரமாகக் கூடிய வவுனியா ஒருங்கிணைப்புக் குழு!

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இன்று (28) காலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்ஹ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட், உணவு வழங்கல் குறைபாடுகளை சுட்டிக்காட்டி, அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்களை ஒருவாரத்திற்கு வழங்க அரசு மற்றும் தனியார் உதவிகளை வழங்குமாறு கோரினார். மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உயர்தர மாணவர்களுக்கான விசேட உதவிகளுக்கு அறிவுறுத்தினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.