ஆண் மேனேஜரை கடத்தி , பாலியல் வன்புணர்ந்து வீடியோவாக பதிவு – கண்டியில் சம்பவம்
ஆண் முகாமையாளரை கடத்தி பாலியல் வன்புணர்ந்து, அதனை வீடியோவாக பதிவு செய்த பின் அவரிடமிருந்த பெறுமதியான பொருட்கள் அபகரிக்கப்பட்ட சம்பவம் கண்டியில் இடம்பெற்றுள்ளது.
வத்தேகம நகரில் உள்ள பல்பொருள் அங்காடி நிலையத்தின் முகாமையாளரே, இவ்வாறு கடத்தப்பட்டு, காட்டுப்பகுதியில் உள்ள வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார்.
அத்துடன் ஒரு 118,500 ரூபாய் பணமும், இரு அலைபேசிகள், வௌ்ளி மோதிரம் மற்றும் கைக்கடிகாரம் ஆகியன கொள்ளையிடப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து ஐந்து நாட்களின் பின், பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சந்தேகத்தில் நால்வர் கட்டுக்கஸ்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுகஸ்தோட்டை ரணவன வீதியில் பயணித்த போது, 23 ஆம் திகதி மாலை, வேனில் வந்த சிலரால் முகாமையாளர் கடத்தப்பட்டார்.
வன்கொடுமைக்கு ஆளான முகாமையாளர், அன்றிரவே வீதியில் விட்டுவிட்டு தப்பிச் சென்றமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடத்தல்காரர்கள் ஆடைகளை களைந்து வீடியோ எடுத்தமையால், பொலிஸில் முறைப்பாடு செய்ய காலதாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கொள்ளையிடப்பட்ட பொருட்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. எனினும் பணத்தை மீட்கமுடியவில்லை என அறியமுடிகிறது.
ஆண் முகாமையாளரை கடத்த பயன்பட்ட வேனை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர், சந்தேகநபர்களை வேனுடன், கண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.