இந்தியாவில் கொரோனா 3வது அலை! தினமும் 1 லட்சம் பேர் பாதிக்க வாய்ப்பு!
இந்தி யாவில் கொ ரோனாவின் மூன்றாவது அலையின் சாத்தியக்கூறு குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.
மருத்துவ ஆராய்ச்சி அமைப்பானது, லண்டனின் இம்பீரியல் கல் லூரியின் பொதுமக்கள் சுகாதாரத்துக்கான பிரிவுடன் இணைந்து ஒரு தரவு அடிப்படையிலான ஆய்வை மேற் கொண்டது.
இதன் முடிவுகள் பற்றிய தகவல்கள் இந் திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப் பட்டுள்ளன. மூன்றாவது அலை ஏற்படக்கூடிய சாத்தியம் பற்றி நம்பத்தகுந்த ஆதாரங்களை அது கொடுத்துள்ளது.
அதே சமயம் மூன்றாவது அலை, இரண்டாவது அலை போல பெரியதாக இருக்க வாய்ப்பில்லை என்பதையும் அந்த ஆய்வு விளக்குகிறது.
கொ ரோனாவின் மூன்றாவது அலை குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி அமைப்பின் தொற்று நோயியல் பிரிவின் தலைவர் பேராசிரியர் சமிரன் பாண்டா கூறும்போது,
கொரோனா மூன்றாவது அலை ஓகஸ்ட் மாதம் தொடங்க வாய்ப்பு உள்ளது. அப்போது தினமும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் கொரோனா தொற் றாளர்கள் உறுதிப்படுத்தப்படலாம்.
தற்போதைய சூழ்நிலையில் வைரஸ் மேலும் பரவும் தன்மைக்கு வழிவகுக்காவிட்டால், அடுத்த கட்ட நிலைமை கொரோனா முதல் அலைக்கு ஒத்ததாக இருக்கும்.
வைரஸ் மேலும் மாற்றம் அடைந்தால் நிலைமை மோசமாக இருக்கும். இந்திய மருத்துவ ஆராய்ச்சி அமைப்பு மற்றும் லண்டன் இம்பீரியல் கல்லூரி ஆகியவற்றால் செய்யப்பட்ட தரவுக் கணிப்பில், குறைந்த தடுப்பூசி வீதங்கள் மற்றும் கட்டுப்பாடுகளை தளர்த்துவது போன்றன கொரோனாப் பாதிப்பில் அதிக எழுச்சிக்கு வழிவகுக்கும் என்று சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.
இருப்பினும், இது இரண்டாவது அலை போல அது கடு மையானதாக இருக்காது என் று தெரிவிக் கப் பட்டிருப்பதையும் நாம் அவதானிக்கவேண்டும்.
கூட்டம் கூடுவதைத் தவிர்ப்பது, முகக்கவசம் அணிவது போன்ற மருந்தியல் அல்லாத நடவடிக்கைகள் நோய்த் தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த உதவும்.
தற்போதைய தடுப்பூசி செலுத்தும் வீதம் குறைவாகவே உள்ளது. இதைவிட சிறப்பான தடுப்பூசி வழங்கும் திட் டம் இருக்க வேண்டும் என்று நான் ஒப்புக்கொள்கிறேன் என தெரிவித்திருக்கிறார்.