இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் 25 பேர்கொண்ட இலங்கை அணி அறிவிப்பு!
இந்திய அணியுடனான ஒருநாள், ரி-20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடவுள்ள 25 பேர் கொண்ட இலங்கை அணி விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வீரர்களுக்குக் கொரோனாத் தொற்று ஏற்பட்டிருக்கலா மென்ற அச்சம் காரணமாக முழுமையான பரிசோதனை களை மேற்கொண்ட பின் னரே அணித்தேர்வு நடை பெற்றிருப்பதால் விவரங் களை அறிவிக்கத் தாமத மாகியுள்ளதாக இலங்கைக் கிரிக்கெட் சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
13ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த தொடர், அணியின் பயிற்சியாளர், உத்தியோகத்தர் மற்றும் வீரரொருவருக்கு தொற்று ஏற்பட்டதன் காரணமாக 18ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
நாளைய தினம் ஒருநாள் போட்டியுடன் ஆரம்பமாகவுள்ள தொடருக்கான இலங்கை அணி வீரர்கள் விவரம்
- தசுன் சானக (கப்டன்)
- தனஞ்செய டி சில்வா (துணைக் கப்டன்)
- அவிஷ்க பொனான்டோ
- பானுகா ராஜபக்ச
- பத்தும் நிஸங்க
- சரித் அஸலங்க
- வனிந்து ஹஸரங்க
- பன்டார
- மினோத் பானுக
- லஹிரு உதார
- ரமேஷ் மெண்டிஸ்
- சமிக கருணரத்ன
- துஷ்மந்த சமீர
- லக்சன் சந்தகன்
- அகில தனஞ்செய
- ரன் பொணான்டோ
- தனஞ்செயலக்ஷன்
- இஷான் ஜெய ரத்னெ
- பிரவீன் ஜெயவிக்கிரம
- அசித பொனான்டோ
- கசுன் ராஜித
- லஹிரு குமார
- இசுரு உதான