இந்திய பிரதமர் மோடியின் தாய் மறைவு, இரங்கல் தெரிவித்துள்ள இலங்கை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் மறைவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

ஹீராபென் மோடி தனது 99வது வயதில் காலமானார்.

“ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியில் உள்ளது” என பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். 

இந்நிலையில் ஹீராபென் மோடியின் மறைவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

“பிரதமர் திரு நரேந்திர மோடியின் அன்பிற்குரிய அன்னையின் மறைவால் ஆழ்ந்த வருத்தத்தினையும். இந்த துயரமான நேரத்தில் பிரதமர் மோடி மற்றும் குடும்பத்தினருக்கு எனது இதயப்பூர்வமான இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.