இலங்கையின் புதிய சட்டமா அதிபராக பதவிப்பிரமாணம் செய்த தமிழர்!
இலங்கையில் 48வது சட்டமா அதிபராக ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ முன்னிலையில் சஞ்சய ராஜரத்தினம் சற்று முன்னர் பதவியேற்றார்.
கொழும்பு றேயல் கல்லூரியில் படித்த இவர் லண்டனின் குயின் மேரி பல்கலைக்கழகத்தில் சட்ட இளங்கலைப் பட்டத்தினை பெற்றார்.
ஜனாதிபதி சட்டத்தரணியான இவர் கடந்த 2014 கார்த்திகை மாதத்தில் ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
சிவில் மற்றும் கிரிமினல் சட்டத்தில் விரிவான அனுபவம் பெற்ற இவர், உயர் நீதிமன்றங்களில் நீண்ட காலமாக முன்னிலையாகி வருகிறார்.
இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வு பிரிவு உட்பட பல அரசு நிறுவனங்களின் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்,
அத்துடன் இலங்கையின் சட்ட ஆணையம் மற்றும் சட்டக் கல்வி கவுன்சில் உறுப்பினராகவும் உள்ளார்
கடந்த 34 ஆண்டுகளகா சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.