இலங்கையிலும் உருவாகிறதா புதிய வைரஸ்?
இப்பொழுது இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றும் வேகத்திற்கு அமைவாக புது விதமான திரிவடைந்த வைரஸ் உருவாவதற்கான வாய்ப்புக்கள் அதிக அளவில் இருப்பதாக சுகாதாரத்திற்கான சர்வதேச ஆலோசகர் கலாநிதி சஞ்சயபெரேரா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்ததாவது
இலங்கையில் புதுவகையான திரிபு வைரஸ் உருவாகும் நிலை ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும்.
கடந்த ஒக்டோபர் மாதத்தில் இருந்து கொரோனா வைரஸ் சமூகத்திற்குள் பரவியுள்ளது.
இந்தியாவில் இனம்காணப்பட்ட புதுவிதாமான திரிபு வைரஸ் புத்தாண்டிற்கு ஒரு வாரத்திற்கு முன்பே இலங்கையிலும் பரவி உள்ளது என எச்சரிக்கை விடுத்த போதும் சுகாதார அதிகாரிகள் அதனை ஏற்கவில்லை என்றார்.