இலங்கையில் அபூர்வ கிராமம் கண்டுபிடிக்கப்பட்டது!
இலங்கையில் தினமும் 7 மணித்தியாலங்கள் மாத்திரமே சூரிய வெளிச்சத்தை காணும் மக்கள்வாழும் கிராமம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
லுணுகம பிரதேசத்திற்குட்பட்ட மடொல்சீம கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள கொஹொனாவெல எனும் கிராமத்தில் யஹன்கல, கல்உல்ல, ஹய்ன்தம்மாகல மற்றும் வியன்கல ஆகிய மலை தொடர்களுக்கு நடுவிலே இக்கிராமம் அமைந்துள்ளது.
இக்கிராமம் 1815ம் ஆண்டு நடைபெற்ற ஊவா வெல்லஸ்ஸ கிளர்ச்சியின் போது மறைந்து கொள்வதற்காக சிலரால் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.
இப்பொழுது இக்கிராமத்தில் 55 குடும்பங்கள் மாத்திரமே வாழ்கிறார்கள். அத்தோடு இவர்கள் விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
இக்கிராமத்தில் நாள்ஒன்றிற்கு ஏழு மணித்தியாலங்கள் மாத்திரமே சூரிய வெளிச்சத்தை காணமுடிவதாக தெரிய வந்துள்ளது. அத்தோடு இக்கிராமத்தில் வாழும் மக்கள் மிகவும் சிரமமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
அருகே உள்ள கிராமங்களிற்கு செல்வதற்கு கூட பாதைகள் இல்லாமல் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.