இலங்கையில் நடந்தது இனப்படுகொலையென சொன்ன கனடா பிரதமருக்கு இலங்கை எதிர்ப்பு

15ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை ஒட்டி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட அறிக்கையில் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள விடையங்களை இலங்கை வெளிவிவகார அமைச்சு நிராகரித்துள்ளது.

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்ட  குற்றச்சாட்டுகளை இலங்கை அரசு திட்டவட்டமாக நிராகரித்துள்ளதென வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடையங்களாவன,

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைகள் குறித்து கனடாவிலோ அல்லது உலகின் வேறு எந்த பகுதியிலோ உள்ள தகுதிவாய்ந்த அமைப்பும் புறநிலையான தீர்மானத்தை அறிவிக்கவில்லை.

தனிநாட்டிற்காக தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்திய ஆயுத பிரிவினைவாத பயங்கரவாத உள்நாட்டு போரின் இறுதிதருணங்கள் குறித்த இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் ஐக்கியநாடுகள் சபையின் பிரகடனத்திற்கு முரணாக காணப்படுகின்றது.

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு கனடா உட்பட 33 நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.

இலங்கை இனப்படுகொலை பற்றிய தவறான கதைக்கு கனடா பிரதமரின் ஒப்புதல் கனடாவில் உள்ள இலங்கை வம்சாவளியினரிடையே நல்லிணக்கத்தை சீர்குலைக்கின்றது.

இலங்கையின் அனைத்து சமூகங்களையும் சேர்ந்தவர்களும் மோதல்களால் பாதிக்கப்பட்டனர் வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்கள் விடுதலை புலிகளின் ஒடுக்குமுறைகளால் அளவுக்கதிகமாக பாதிக்கப்பட்டனர்.

விடுதலை புலிகளின் ஈவிரக்கமற்ற பயங்கரவாத நடவடிக்கைகளால் அனைத்து சமூகத்தினரும் பாதிக்கப்பட்டனர். கனடா பிரதமரின் பாரபட்சமான கதை இலங்கை மோதலின் சிக்கலான யதார்த்தத்தை புறக்கணிக்கின்றது.

இந்த கருத்துக்கள் இலங்கையர்கள் மத்தியில் பாதகமான விதத்தில் எதிரொலிக்கும் இலங்கையில் தேசிய ஐக்கியம் நல்லிணக்கம் முன்னேற்றத்துக்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளை சீர்குலைக்கும் என குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.