இலங்கையில் புத்தர் பிறந்ததாக வினோத கதைகளை கூறிய தேரருக்கு நேர்ந்த கதி
புத்தர் இலங்கையில் பிறந்ததாக பெளத்த துறவி ஒருவர் தெரிவித்த கருத்து அண்மைய நாட்களில் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.
மல்வத்து மகா விகாரையை சேர்ந்த பதுளை பிந்தன கிழக்கு பிரதம பிக்குவான சுமனசார தேரர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக மல்வத்துபீட பிரதம பதிவாளர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
புத்தரின் குணாதிசயங்களையும், புத்தரின் போதனைகளையும் சிதைத்து, மகா விகாரை மரபுகள் மற்றும் திரிபீடக போதனைகளுக்கு மாறாக புத்தரின் பிறப்பு பற்றி தவறான கருத்துக்களை பரப்பி, மகா விகாரை சங்கத்தை அவதூறு செய்தல், நற்பெயருக்கு கலங்கம் விளைவித்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மல்வத்து மகா விகாரை சுமங்கல தேரரின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.