18ம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பம்!
எதிர்வருகின்ற 18ம் திகதி ஊவா மாகாணத்திலுள்ள 200 இற்கும் குறைந்தளவான மாணவர்களை கொண்ட அனைத்து பாடசாலைகளையும் ஆரம்பிப்பதற்கு திட்டம் இடப்பட்டுள்ளதாக ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முசம்மில் தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் 18ம் திகதி திறக்க தேவையான வசதிகளை ஏற்படுத்துமாறு அனைத்து மாகாண கல்வி காரியாலயங்களுக்கும் அறிவித்தல் விடுத்துள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.
அத்தோடு, தென் மாகாணத்திலும் 200க்கு குறைவான மாணவர்களை கொண்ட 514 பாடசாலைகளையும் எதிர்வரும் 21ம் திகதி திறப்பதற்கு திட்டம் இடப்பட்டுள்ளதாக தென் மாகாண ஆளுநர் விலி கமகே தெரிவித்துள்ளார்.
இந்த மாதம் 21ம் திகதி அளவில் இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் 200 ஐ விட குறைந்த மாணவர்களை கொண்ட எல்லா பாடசாலைகளையும் திறப்பதற்கான வாய்ப்புள்ளதாக தென் மாகாண ஆளுநர் விலி கமகே மேலும் தெரிவித்தார்.