கஞ்சா செடிகளுடன் கைது செய்யப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்

(LBC Tamil) ஒரு தொகை கஞ்சா செடிகளுடன் மொனராகலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்கேநபரிடமிருந்து 350 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.
இது குறித்த விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் குழுவொன்று சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் கூறினார்.