கட்டாய இராணுவ சேவையை ஒரு வருடமாக நீடித்தது தென்கொரியா
(LBC Tamil) தாய்வான் இராணுவ சேவையை 4 மாதங்களில் இருந்து ஒரு வருடமாக நீடிக்குமென அந்நாட்டு ஜனாதிபதி சாய் இங் வென் தெரிவித்துள்ளார். இந்த முடிவு சீனாவுடன் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் வந்துள்ளது
சீனாவிடம் இருந்து தாக்குதல் நடந்தால், தாய்வானின் பாதுகாப்பை வலுப்படுத்தும் திட்டங்களை இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகவியலாளர் சந்திப்பில் ஜனாதிபதி சாய், அறிவித்தார்.
அமெரிக்க மற்றும் பிற மேம்பட்ட இராணுவத்தினரிடமிருந்து சில ஆயுதங்களை கடனாகப் பெற்று, கட்டாயப் பயிற்சி பெறுவோர் மேலும் தீவிர பயிற்சிக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று ஜனாதிபதி சாய் கூறினார்.
தாய்வானின் தற்போதைய பாதுகாப்பு அமைப்பு உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் மேம்பட்ட இராணுவங்களில் ஒன்றான சீனாவின் ஆக்கிரமிப்பைச் சமாளிக்க போதுமானதாக இல்லை என்றும் அவர் கூறினார்.
‘இது மிகவும் கடினமான முடிவு, ஆனால் ஜனாதிபதியாக, இராணுவப் படைகளின் தலைவராக, தேசிய நலன்களையும் நமது ஜனநாயக வாழ்க்கை முறையையும் பாதுகாப்பது எனது தவிர்க்க முடியாத கடமையாகும். சர்வாதிகார விரிவாக்கத்தின் முன்னணியில் தாய்வான் உள்ளது ‘ என்று ஜனாதிபதி சாய் தெரிவித்தார்.
கடந்த 1990ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து ஆண்களும் மூன்று ஆண்டுகள் வரை இராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்து தாய்;வான் இராணுவம் மாறிவிட்டது.
அடுத்த சில தசாப்தங்களில், சேவை ஒரு வருடம் மற்றும் 10 மாதங்களுக்கு குறைக்கப்பட்டது, அதற்கு முன் நான்கு மாதங்களாக குறைக்கப்பட்டது.
புதிய விதி 2024ஆம் ஆண்டு ஜனவரியில் அமுலுக்கு வரும். அதே மாதத்தில் தாய்வான் தனது அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும்.