கோட்டாபய, மஹிந்த உள்ளிட்ட நால்வருக்கு தடை: கனடாவின் பதில் உயர்ஸ்தானிகர் வௌிவிவகார அமைச்சுக்கு அழைப்பு
(LBC Tamil)
Colombo (News 1st) இலங்கைக்கான கனடாவின் பதில் உயர்ஸ்தானிகர், வௌிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ, ஊழியர் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க , லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாரச்சி உள்ளிட்டவர்கள் நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு கனடா தடை விதித்தமை தொடர்பில் ஆராய்வதற்காக அவர் அழைக்கப்பட்டிருந்தார்.
1983 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரை இடம்பெற்ற சிவில் யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கனேடிய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தடையின் கீழ், கனடாவில் இவர்களுக்குள்ள சொத்துகள் அனைத்தும் முடக்கப்படுவதுடன், நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.