பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் சந்தேகநபர் உயிரிழப்பு

(LBC Tamil) ஹங்வெல்ல குறுக்கு வீதியில் கடந்த 19 ஆம் திகதி சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் ஒருவரை சுட்டுக் கொலை செய்த சந்தேகநபர் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார்.
குறித்த சந்தேகநபர் ஹங்வெல்லயிலுள்ள வீடொன்றில் தலைமறைவாகியிருந்ததாக இரகசிய தகவல் கிடைத்ததாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.
அதற்கமைய, மேல் மாகாண தெற்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் குழுவொன்று இன்று அதிகாலை சந்தேகநபரை கைது செய்ய குறித்த பகுதிக்கு சென்ற போது, சந்தேகநபரால் பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் சந்தேகநபர் உயிரிழந்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் தனது சிற்றுண்டிச்சாலையை மூடிவிட்டு வீடு செல்ல தயாரான உரிமையாளர் மீது குறித்த நபரால் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, 46 வயதான மொஹமட் பரூஷான் என்பவர் உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டு தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.



