சம்பந்தனின் இழப்பு பெரிதும் உணரப்படும் – சரத் பொன்சேகா இரங்கல்
இலங்கை தமிழரசு கட்சியின் பெரும் தலைவர் இரா. சம்பந்தனின் மறைவிற்கு இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தனது எக்ஸ் பக்கத்தின் ஊடாக இரங்கலை தெரிவித்துள்ளார்.
“எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கௌரவ. ஆர்.சம்பந்தன் மிகவும் மூத்த அரசியல்வாதி. அவரது இழப்பு பெரிதும் உணரப்படும்.” என பதிவிட்டுள்ளார்.