சிறுமியை துஷ்பிரயோகம் செய்த ஆலய குருக்களை தேடி பொலிஸார் வலைவீச்சு!
சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆலய குருக்களை தேடி பொலிஸார் வலைவீசி தேடிவருகின்றனர்.
குளியாபிட்டி பகுதியில் உள்ள இந்து ஆலயத்தின் குருக்களே சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
காதல் தொடர்பினை முறிப்பதற்காக, குளியாபிட்டி போஹிங்கமுவ பகுதியில் உள்ள தாய் ஒருவர், தனது 15 வயது மகளுடன் கடந்த 26ம்திகதி ஆலயத்திற்கு சென்றுள்ளார்.
இதன்போது, ஆலயத்தின் குருக்களினால் சிறுமி, துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுபதிவு செய்யப்பட்டுள்ளது.
சந்தேக நபரான குருக்கள், பிரதேசத்தைவிட்டு தப்பிசென்றுள்ளதுடன், கடந்தசில நாட்களாக ஆலயமும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
இது குறித்த விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.