நடிகை கஸ்தூரி தலைமறைவு!

இந்து மக்கள் கட்சி சார்பில் பிராமணர்களுக்கும் தனி வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்தில், நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்களுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்ததாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்த கருத்துகளுக்கு எதிராக தெலுங்கு அமைப்புகள் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் புகார்கள் கூறியிருந்தன.

இதன் பின்னணியில், சென்னை எழும்பூர் பகுதியில் தெலுங்கு அமைப்பின் புகாரின் பேரில் கஸ்தூரி மீது பொலிஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

வழக்கு தொடர்பாக காவல் துறையினர் சம்மன் கொடுக்க சென்றபோது, நடிகை கஸ்தூரி தலைமறைவாகி விட்டதாக தகவல்கள் வந்துள்ளன. மேலும், கஸ்தூரியின் செல்போனும் தொடர்பு கொள்ள முடியவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

அவரை தேடுவதற்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக எழும்பூர் காவல் நிலையம் அறிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.