நல்லெண்ணச் செய்தியாக அரசியல் கைதிகளின் விடுதலை அமைய வேண்டும்
தமிழ் மக்களுக்கான நல்லெண்ணத்தையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் செய்ற்பாடாக அரசியல் கைதிகளை விடுதலை செய்யப்படுவதுடன், காணி பிரச்சினைகளுக்கும் காத்திரமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியுடன் நடைபெற்ற சந்திப்பிலும் வலியுறுத்தியுள்ளார்
மேலும் அரசியல் பிரச்சினைகளைப் பொறுத்த வரைசயில் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை 3 கட்டங்களாக முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தாம் வலியுறுத்தியதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தெரிவித்துள்ளார்.