புதிய அரசில் குடும்ப உறுப்பினர்களை பணியாளர்களாக நியமிக்க முடியாது – பிரதமர்
புதிய அரசாங்கத்தின் கீழ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை தனிப்பட்ட பணியாளர்களாக நியமிக்க முடியாது என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
கம்பஹாவில் தேசிய மக்கள்சக்தியின் மகளிர் அணியினர் ஏற்பாடு செய்த பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய அவர், புதிய நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வசதிகளை குறைக்கப்படும் எனவும் கூறினார்.
உத்தியோகபூர்வ இல்லங்கள் மற்றும் பிற வசதிகளை மட்டுப்படுத்தப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
இது, ஊழலுக்கு எதிரான கடினமான முடிவுகளை எடுக்க தேவையானது என்றும், கடினமான சூழ்நிலைகள் ஆற்றல் வாய்ந்த மாற்றங்களை ஏற்படுத்தலாம் எனவும் பிரதமர் தெரிவித்தார்.