பேருந்து விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 1 மில்லியன் வழங்க நடவடிக்கை

கொத்மலை ரம்பொடை – கெரண்டிஎல்ல பகுதியில் ஏற்பட்ட பயணிகள் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கும் தீர்மானத்தை அரசாங்கம் எடுத்துள்ளது.
இந்த தீர்மானத்தின் அடிப்படையில், விபத்தில் உயிரிழந்த ஒவ்வொரு நபரின் குடும்பத்தினருக்கும் ரூ. 10 இலட்சம் (1 மில்லியன்) வீதம் வழங்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் தொடர்பான பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.