போதைப்பொருள் கடத்தல் நபரின் நெருங்கிய நண்பன் கைது!
போதைப்பொருள் கடத்தல் குற்றம் தொடர்பாக “பாணந்துறை நீலங்ககே” என்பவரின் நெருங்கிய நண்பன் களுத்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் பாணந்துறை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அவர் கல்கிசை பிரதேசத்தைச் சேர்ந்தவர் மற்றும் மஹபெல்லன, தொட்டுபொல பகுதியில் தற்காலிகமாக தங்கியிருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டார்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 700,000 ரூபா பணம், 52 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.